search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொலைதூர கல்வி"

    • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வருகை தந்து உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவம் பெற்று கொள்ளலாம்.
    • ஏற்கனவே உதவித் தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஜெரி பாஜி இமானுவேல் விடுத் துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும்அதற்கு மேலும் உள்ள கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து வரும் பதிவுதாரர் களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட் டத்தில் தற்போது 1.7.2022 முதல் 30.9.2022-ந்தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவ தற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    வேலைவாய்ப்பு அலு வலகத்தில் பதிவுசெய்து 30.6.2022 தேதியில் 5 ஆண் டுகள் நிறைவு செய்திருத் தல் வேண்டும். 30.9.2022 அன்று உச்ச வயது ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினருக்கு 45 வயதுக் குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு 40 வயதுக்குள்ளும் முடிவ டையாமல் இருக்க வேண் டும். உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகைப்படா மல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து 30.6.2022 தேதியில் ஒரு வருடம் முடிவுற்றி ருந்தால் போதுமானது. மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயது வரம்பு மற்றும் வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை,

    பொதுப்பிரிவு பதிவு தாரர்களைப் பொறுத்த வரை பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர் களுக்கு ரூ.200-ம். பள்ளி இறுதி வகுப்பு நேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம் செய்யலாம். பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பள்ளியி றுதி வகுப்பிற்கு கீழ் மற் றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன் றுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-ம் தமிழக அரசால் வழங்கப் படும்.

    மனுதாரர் பள்ளி அல் லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயேமுடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாகவேலையில் லாதவராகவே இருக்க வேண்டும். இந்த உதவித் தொகையினை பெற அர சிடமிருந்து வேறு எந்த வகையிலும் எந்தவித மான உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. கல்வி நிறுவனத் திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாண வியராகஇருக்கக்கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனு தாரர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

    மேற்கூறிய தகுதி மற் தும்விருப்பமுடையபதிவு தாரர்கள் தங்களதுஅசல் கல்விச்சான்றிதழ், மாற் றுக்கல்விச் சான்றிதழ்மற் றும் வேலைவாய்ப்பு அலு வலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல சுத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வருகை தந்து உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவம் பெற்று கொள்ளலாம்.

    இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித் தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக்கொண் டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. 3 ஆண் டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின்கீழ் உத வித்தொகையை பெற்றுவ ரும் பயனாளிகள் இந்த உதவித்தொகையினை தொடர்ந்து பெறவேண்டு மானால் (மாற்றுத்திறனா ளிகள்பொறுத்தவரையில் 107 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால்) சுயஉறுதிமொழி ஆவ ணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி மற்றும் தொழில்சார்ந்த கல்வி பயின்று வரும் பதிவுதா ரர்களும், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களும் வேலை வாய்ப்பற்றோர் நிவாரணம் பெற இயலாது.

    இவ்வாறு கூறி உள்ளார்

    ×